முதல்வரை சந்தித்தது ஏன்? ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை தமிழச்சி பவானி தேவி பேட்டி.!  - Seithipunal
Seithipunal


ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற்று கொண்டு இருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி, 15-3 என்ற கணக்கில் துனிசியாவின் நாடியா பென் அஜிசியை வீழ்த்தி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றில் பவானி தேவி அதிர்ச்சி தோல்வியடைந்தார். இருப்பினும் அவருக்கு இந்தியர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அணைத்து தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினை ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,

"என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி. தமிழகம் சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்துள்ளனர்.

நான் ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்திய எனது வாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளிக்க அளித்தேன். ஆனால், அவர் அதை எனக்கே திருப்பி பரிசாக அளித்தார். 

நான் ஏற்கனவே மின்சாரத்துறையில் பணியாற்றி வருகிறேன், தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளதால் எனக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதற்காக நான் காத்து இருக்கிறேன். மற்ற மாநிலங்களில் இருந்து மத்திய அரசு தரப்பில் இருந்து பல வாய்ப்புகள் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் நான் தமிழகத்தில் பணி செய்ய விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் சாதனைகள் பின்வருமாறு:

தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை ச.ஆ பவானி தேவி (சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி) 1993 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ந்தேதி பிறந்தார். இவரின் தந்தை ஒரு மதபோதகர், தாய் இல்லத்தரசியாக உள்ளார்.

இவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து வாள்வீச்சில் ஈடுபட்டு வருகிறார். 2004 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள முருகா தனுஷ்கோடி பள்ளியில் படிக்கும் போது, பள்ளிகள் அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டார்.

பின்னர், கேரளா மாநிலம் தளச்சேரி விளையாட்டு அரங்கத்தில் சேர்ந்தார். இவருக்கு 14 ஆம் வயதாக இருக்கும் போது தனது முதல் சர்வதேச போட்டியில் கலந்துகொண்டார். 2010 ஆம் ஆண்டில் பிலிப்பீன்சுவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றார்.

மேலும், 
* மலேசியாசியாவில் நடைபெற்ற 2009 பொதுநல விளையாட்டுப் போட்டிகளில் இவர் வெண்கலம் வென்றார்.
* 2010 இல் பிலிபீன்சுவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெள்ளி வென்றார். 
* அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள், பவானி தேவி அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்காக அவருக்கு 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை அளித்தார்.
* ராகுல் திராவிட்டின் தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பதினைந்து நபர்களில் ஒருவராகத் தேர்வானார்.
* 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநல விளையாட்டுக்களில் தங்கம் வென்றார்.
* ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் முதல் வாள்வீச்சு வீராங்கனை, வாள்வீச்சு போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BHVANI DEVI meet TNCM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->