#சற்றுமுன் வெளியான தேர்தல் முன்னணி நிலவரம்.! மகிழ்ச்சியில் பாஜக., அதிர்ச்சியில் காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


#சற்றுமுன் வெளியான தேர்தல் முன்னணி நிலவரம்.! மகிழ்ச்சியில் பாஜக., அதிர்ச்சியில் காங்கிரஸ்.!

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை 55 மையங்களில் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல்  தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 9.47 மணி நிலவரப்படி., தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சிறிய பின்னைவுடன் உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி :  111  இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஜே.டி.யு    :  45
பாஜக       : 59
மற்றவை : 6

மெகா கூட்டணி :  117  இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆர்.ஜே.டி   : 75
காங்கிரஸ் : 28
மற்றவை   : 7

எல்.ஜே.பி : 08  இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதர கட்சிகள் :  08 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்த தேர்தலில் மாநில கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை விட கூட்டணியில் உள்ள பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. மேலும், வெளியான முன்னிலையை நிலவரப்படி., பாஜக இரண்டாவது இடத்தில உள்ளது. இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே.டி  :  75
பாஜக   :  59
ஜே.டி.யு   :  45
காங்கிரஸ்  : 28
எல்.ஜே.பி : 8
இதர கட்சிகள் : 29   இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhiar election 2020 result 2 round


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->