தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி கைது.!! புயலை கிளப்பிய பாஜக முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் நீதி யாத்திரை எனும் பெயரில் இந்திய ஒற்றுமை இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மும்பை வரை யாத்திரை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது ஆளும் பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்குப் பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். 

ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுஹாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அதன் காரணமாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவுஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதனைத் தொடர்ந்து, அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் ராகுல் காந்தியின் யாத்திரை நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது "வழக்குகளை போட்டு என்னை மிரட்டலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. உங்களால் முடிந்த அளவு வழக்குகளை பதிவு செய்யுங்கள். நான் பயப்படமாட்டேன். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் என்னை மிரட்ட முடியாது” பேசி இருந்தார்.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்திப்பின்போது "நாங்கள் சிறப்பு விசாரணைக் குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தும். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அவரைக் கைது செய்வோம். தற்போது கைது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. கவுகாத்தியில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது" என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam cm says rahul gandhi will be arrest after loksabha elections


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->