தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் போற்று ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி செயல்பட்டுவந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கடந்த 06 மாதங்களாக அர்லேகர் செயல்பட்டு வந்தநிலையில், கேரளா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிக்கிம் ஆளுநராக செயல்பட்டு வந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arlekar appointed as full time Governor of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->