ஜி.கே வாசனை சந்திக்கும் முக்கிய புள்ளி... பாஜகவின் அதிரடி மூவ்.!! - Seithipunal
Seithipunal


பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாளை அறிவிக்க உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு யாருடன் கூட்டணி அமைப்பது என்ற குழப்பத்தில் இருந்து வந்தது.

அதனை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஜிகே வாசன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகிகளின் கருத்து கேட்ட பிறகு நாளை கூட்டணி நிலைபாடு குறித்து அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை தமாகா தலைவர் ஜி.கே.வாசனை தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பாஜக, தமாகா இடையேயான கூட்டணி அமைப்பு குறித்த சந்திப்பாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravindmenon meets gkvasan regards alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->