அமைச்சர் அன்பரசனுக்கு தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அவமரியாதை செய்துள்ளார்: அண்ணாமலை விமர்சனம்..!
Annamalai criticizes Minister Anbarasan for disrespecting him by hoisting the national flag upside down without even realizing it
அமைச்சர் தா. மோ. அன்பரசனுக்கு தமிழ் மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்பது போல, தேசியக் கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிள்ளார். தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அவமரியாதை செய்திருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் தா. மோ. அன்பரசன், தாமதமாக கலந்து கொண்டதோடு, மின்சாரம் தடைபட்டதால், மாணவ மாணவியரை சுமார் 1 மணி நேரம் காத்திருக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அவமரியாதை செய்திருக்கிறார்.
அமைச்சர் தா. மோ. அன்பரசனுக்கு தமிழ் மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்பது, ஏற்கனவே ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிந்தது. தேசியக் கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது, நமது மாணவச் செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai criticizes Minister Anbarasan for disrespecting him by hoisting the national flag upside down without even realizing it