இது பொங்கல் தொகுப்பு அல்ல.. பொய் தொகுப்பு..! கோவையில் பொங்கிய அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் "மத்திய அரசு 2023ம் ஆண்டு வரை ஏழைகளுக்கான உணவு வழங்கிட 2 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளது. இந்தியாவில் உள்ள 83 கோடி மக்கள் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தின் மூலம் பயன் அடைகின்றனர். 

 தமிழக அரசு இதையாவது உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் வேண்டுகோள். கடந்த பொங்கலுக்கு கருப்பு கொடுத்தீங்க இந்த வருடம் கரும்பு கொடுக்கவில்லை. தமிழகத்தில் பனைவெல்லம் உற்பத்தியை ஆரம்பிக்கிறோம் என்று சொன்னார்கள். அதையாவது பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். தற்பொழுது தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஆயிரம் ரூபாய் தான் கொடுத்துள்ளது. ஆகவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு.

அமைச்சர் ஏ.வ. வேலு ஏன் சக்கரை பொங்கல் கொடுக்கிறோம் என்றால் அப்போதுதான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என அபத்தமான கருத்தை சொல்கிறார். திமுகவினர் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார்கள். சென்ற வருடம் ஏன் வெள்ளம் கொடுத்தீர்கள் என தெரியாது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்பொழுது கேட்டால் சும்மா சொன்னோம் என்கிறார்கள். இதற்கெல்லாம் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai criticized TNgovt pongal gift


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->