ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற நடிகை ரோஜா நேற்று திருப்பதிக்கு வந்தபோது அவரின் செல்போனை மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

வருகின்ற 21 தேதி திருப்பதியில் உள்ள எஸ்.வி பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. 

இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  திருப்பதி வந்துள்ள அமைச்சர் ரோஜா பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.

இவர் கூட்ட அறைக்கு சென்றபோது அவருடைய செல்போன் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் எஸ்.வி பல்கலைகழகத்தில் தற்காலிக ஊழியராக பணி புரியும் நபர் மேசையில் இருந்த செல்போனை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து திருப்பதி காவல்துறை சூப்பிரண்டு பரமேஸ்வரி ரெட்டி தெரிவிக்கையில்,

"அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருடு போகவில்லை. அவர் கவனக்குறைவாக தனது செல்போனை மேசையில் வைத்துவிட்டு கூட்ட அரங்கிற்கு சென்றார். கேட்பாரற்று கிடந்த செல்போனை ஊழியர் தற்காலிகமாக எடுத்து வைத்துக்கொண்டார்". என்று காவல்துறை சூப்பிரண்டு பரமேஸ்வரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra minister roja mobile robbery


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->