டெல்லிக்கு அழைக்கும் பாஜக.!! பாமகவின் நிலைப்பாடு என்ன.? அன்புமணி ராமதாஸ் கொடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோருக்கும் பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் பங்கேற்று எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு நாடு முழுவதும் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதேபோன்று கடந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகியோருக்கும் பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த மூன்று கட்சிகளுக்கு மட்டுமே பாஜக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. 

இந்த நிலையில் இன்று செங்கல்பட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் இப்பொழுது அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்திருப்பது  குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர் "டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வருமாறு பாஜக தலைவர் அழைப்பு பிடித்துள்ளார். எங்கள் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு செய்யும்" என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani said that PMK will soon decide on BJP invite


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->