நீங்க என்ன அறிவிக்கிறது, நானே அறிவிக்கிறேன்! முன்னாள் அமைச்சரை நீக்கிய தினகரன்! அதிமுக பக்கம் தாவும் முன்னாள் அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


அமமுக பொது செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி  கிழக்கு  மாவட்ட கழக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக  கழக தேர்தல் பிரிவு செயலாளர்  திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் தலைமையில்  இன்று முதல்  பொறுப்புக்குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவில்  கீழ்கண்ட  நிர்வாகிகள்  இடம் பெறுகின்றனர்.

பொறுப்புக்குழு விவரம்
1.     திரு.இ.லெட்சுமணன் அவர்கள்
    கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர்
2.    திரு. P. ஹிமாம் பாதுஷா  அவர்கள்
    மாவட்ட அவைத்தலைவர் 
3.     திரு.T. செல்வம்  அவர்கள்
    மாவட்ட துணைச்செயலாளர் 
4.     திரு.M.நவமணி  அவர்கள்
    மாவட்ட புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் மன்ற  செயலாளர் 
5.     திரு. P. செந்தில்முருகன்  அவர்கள்
    மாவட்ட புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் இளைஞரணி  செயலாளர் 

கழக அமைப்புச்செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.K.T.பச்சைமால் அவர்களும், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்  பொறுப்பிலிருக்கும்  திரு நாஞ்சில் முருகேசன் அவர்களும், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழு நிர்வாகிகளுக்கு  கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தினகரன் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர் K.T.பச்சைமால் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK dhinkaran withdrawn former minister pachaimal party post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->