''எதிர்க்கட்சிகள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்வேன்'': பாராளுமன்றத்தில் அமித் ஷா காட்டம்..! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் சொன்ன பொய்கள் எவ்வளவு என்பதை நாளை நாங்கள் சொல்கிறோம் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜூலை 28) விரிவாக பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து பதிலளித்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் சிலர் கூச்சலிட்டு இடையூறு செய்தனர். அவர்களை சபாநாயகர் எவ்வளவோ கேட்டும் அவர்கள் கூச்சலிட்டு கொண்டே இருந்தனர். குறித்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் குறுக்கிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது; எதிர்க்கட்சியினருக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், வேறு ஏதோ சில நாடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்களின் கட்சியில் அந்நியர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், அவர்களின் அனைத்து விஷயங்களும் இங்கே திணிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்றும், அதனால் தான் அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்கள் அங்கேயே தான் உட்கார்ந்து இருக்க போகிறார்கள் என்று கடுமையாக பேசினார்.

மேலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) பேசும் போது, நாங்கள் பொறுமையாக கேட்டோம். ஆனால், நீங்கள் எத்தனை பொய்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை நாளை நான் இங்கே சொல்வேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

அவையில் எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம் இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையை கேட்க மறுக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். வெளியுறவு அமைச்சர் பேசும் போது இதுபோன்ற குறுக்கீடுகள் ஏற்புடையதா..? எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் இதை புரிய வைக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah says he will reveal in Parliament tomorrow how many lies the opposition parties have told


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->