சூடுபிடிக்கும் அரசியல் களம்... தமிழகம் விரையும் மத்திய மந்திரிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியலும் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்கள் வருகை தொடர்ந்த அதிகரித்துள்ளது. வருகின்ற 13, 14ஆம் தேதிகளில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். 

இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் இருந்து தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வர உள்ளார். 

காலை 10 மணி அளவில் ஓசூர், ராம் நகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். 

இதனை தொடர்ந்து சிதம்பரம் மற்றும் தஞ்சாவூரில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார். 

நாளை கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் எல். முருகனை ஆதரித்தும் கோவை வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளரை ஆதரித்தும் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்க உள்ளார். 

இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வரவுள்ளார். அவர் மாலை 5.30 மணி அளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் வாகன பேரணியாக சென்று பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah Nirmala Sitharaman today TN campaign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->