வாக்கு எந்திரத்தை தூக்கிட்டு போய்ட்டாங்க - அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


வாக்கு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், வாக்கு எந்திரத்தை தேர்தல் அதிகாரிகள் தூக்கி சென்றுவிட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாற்றம் செய்து உள்ளதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி தான் நிச்சயம் வெற்றி பெற உள்ளது. இதனை அறிந்த பாஜக பயத்தில் உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எந்திரங்களில் முறைகேட்டை செய்துள்ளது.

வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றுள்ளார். தேர்தல் ஆணையம் இதனை கவனிக்கவேண்டும். இயந்திரங்கள் வழியில் கொண்டு செல்லப்பட்டாள் நாம் எச்சரிக்கையாக எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

நமது வாக்குகளை நாம் காப்பாற்ற வேண்டும். இதை கண்டித்து நாம் நீதிமன்றம் செல்லலாம். ஆனால் அதற்கு முன் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

akhilesh yadav say about vote counting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->