அவர "டார்ச் லைட் புடிச்சுட்டு நிக்க சொல்லிட்டாங்களாம்".. வெளுத்து வாங்கிய விந்தியா.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் விந்தியா நேற்று பரமக்குடி பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியில் பேசிய விந்தியா "பரமக்குடி மக்கள் மீது எனக்கு விரும்பவே மரியாதை இருக்கு. ஆனால் பரமக்குடி பெயரையே கெடுப்பவர் கமல்ஹாசன். 

கத்தியை எடுத்துக்கொண்டு குத்த போனாலும் கண் சிமிட்டாதவர்கள் பரமக்குடிக்காரர்கள். ஆனால் இன்று திமுகவின் கைத்தடியாக கமலஹாசன் நிற்கிறார். இவ்வளவு மலிவான விலையில துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டாதான் சாயம் போகும். ஆனால் தண்ணியில் போடாமலேயே சாயம் போன ஆளு கமலஹாசன் மட்டும் தான்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின் என சொல்வதை ஏன் கெட்ட வார்த்தை என பேசிய கமலஹாசன் இன்று திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார். 

அவரிடம் கட்சிக்காரர்கள் சென்று பேச்சுவார்த்தை என்ன ஆச்சுன்னு கேட்டதற்கு டார்ச் லைட் ஏன் இப்ப சொல்லிட்டாங்கனு.. அப்படியா எத்தனை தொகுதி எந்த தொகுதியின் கேட்க... தொகுதியில இல்லப்பா.. டார்ச் லைட்டை கையில புடிச்சுகிட்டு இருக்க சொல்லிட்டாங்க ன்னு சொன்னாராம்.. டார்ச் லைட்டை வீசி டிவி எல்லாம் உடைச்சிட்டு கட்சி ஆரம்பிச்சாரு... திமுக எதிர்த்து கட்சி ஆரம்பிச்ச வீரன்னு நினைச்சிட்டோம்.. அன்னைக்கு அவர் டார்ச் லைட் பேசினது டார்ச் லைட்டை உடைக்கத்தான்" என கமலஹாசனை கடுமையாக போட்டு தாக்கி பேசியுள்ளார் விந்தியா. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK vindhiya criticized MNM KamalHassan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->