வாய்ச்சொல் வீரர் "உதயநிதியின் நீட் ரகசியம்" என்னாச்சு? - வெளுத்து வாங்கிய அதிமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு என்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 20 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு மேல் எழுத உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து ரகசியம் தங்களுக்கு தெரியும் எனவும் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் எனவும் உதயநிதி பேசியது தொடர்பாக அதிமுக தரப்பு தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. 

செய்தியாளர்கள் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் "நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட முன் வருவாரா? நீட் தேர்வு ரகசியம் வெளியிட துணை புரிவாரா முதலமைச்சரின் மு.க ஸ்டாலின்? திமுக அரசு வாய்ச்சொல் வீரராக இருக்கிறதே தவிர மக்களுக்காக இல்லை. 

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்கிற அந்த ரகசியத்தை எப்போது உடைக்க போகிறீர்கள்? மக்களை ஏமாற்றம் செயலை திமுக தொடர்ந்தால் இன்னும் பல உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்கும். எனவே திமுக அரசு வாக்குறுதி அளித்தது போல நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு தீர்வு காணும் வகையில இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் 7.5% இட ஒட்டிக்கீட்டை எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆனால் அதை திமுக அரசு மூடி மறைக்கிறது. சாதனையை அரசு திரையிட்டு மூடப்பார்க்கிறது. ஆனால் நீட்தேர்வுக்கு உந்து சக்தியாக 7.5% இடஒதுக்கீடு இருந்தது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நீட் தேர்வை இதயக்கனியாக மாற்றியவர் எடப்பாடியார் என பெருமிதத்துடன் குறிப்பிட மறக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK udhayakumar ask udhayanithi neet cancel secret


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->