#திடீர்திருப்பம் | தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது எடப்பாடி பழனிசாமியை அல்ல! அந்த ஆவணம் பொய்யா?! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவின் இந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் இபிஎஸ் கையொப்பமிட்ட, அதிமுகவின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 03/10/2022 அன்று ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்துள்ளது. அதிமுகவின் வரவு செலவு தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் மறைமுகமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்று அதிமுகவினர் கருது தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட வரவு செலவு கணக்கு, நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது என்று ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவரின் அந்த பேட்டியில், "பொதுக்குழு முறையாக நடைபெறும், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இறுதி வெற்றி எங்களுக்கு தான். அதிமுகவினர் இணைய கூடாது என்ற எண்ணம் ஈபிஎஸ்-க்கு மட்டும் தான் உள்ளது. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS vs EPS EC Documents 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->