#BREAKING:: அண்ணாமலை புலம்புவது ஏன்.? "அதிமேதாவி தலைமறைவாக இருந்தாரா.?".. ரவுண்டு கட்டிய அதிமுக எம்எல்ஏ..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக தமிழக பாஜகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

குறிப்பாக தமிழக பாஜக ஐடி விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் விஜய், முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் லதா, தாம்பரம் பகுதி பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அக்கட்சியின் மாநில விளையாட்டு அணி தலைவர் அமல் பிரசாத் ரெட்டி அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

மேலும் நேற்று செய்தியாக சந்தித்த அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்து தான் திராவிட கட்சிகள் தங்களை பெரிய கட்சியாக காட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை எரித்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிமுகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் பாஜகவினரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் பாஜகவினரின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அஇஅதிமுகவில் பலரால் மதிக்கப்படாத சிலரை அதிமுகவில் சேர்த்த போது மகிழ்ந்த அண்ணாமலை, தற்பொழுது புலம்புவது ஏன்? 

அப்போது எல்லாம் அமர் பிரசாத் ரெட்டி எனும் அதிமேதாவி எங்கோ தலைமறைவாக இருந்தாரா.? கழகம் காத்த மாவீரன் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று திமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தினந்தோறும் கழகத்தில் இணைந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவரை தலைவராக ஏற்றுக் கொண்ட கோவில்பட்டியை சேர்ந்த 4 நபர்கள், தங்களது தலைவர் வழியில் சுய விளம்பரத்திற்காக தமிழக மக்களின் காவலர் எங்கள் அண்ணன் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் படத்தை கொளுத்தியதை வன்மையாக கடலூர் மேற்கு மாவட்ட கழக சார்பில் கண்டிக்கிறோம்" என பதிவிட்டுள்ளார். அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA condemns BJP for burning EPS photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->