கழட்டி விட்டாச்சு.. தூக்கத்தில் எழுப்பி‌ கேட்டாளும் இது தான் முடிவு.!! - அதிமுக தரப்பு அதிரடி.!!! - Seithipunal
Seithipunal


நாடாளுன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில்  மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. தேரதல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழத்தில் பிரதான எதிர் கட்சியான‌ அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 4 குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் தேர்தல் பிரச்சார குழு, தொகுதி பங்கிட்டு குழு ஆகியவை இணைந்து இன்று ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரக் குழு, தொகுதி பங்கிட்டு குழுவும் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "எப்போ கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை. பாஜக என்ற பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டது, விட்டது தான். நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறார.

தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்றி நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும். இந்தியா கூட்டணி நெல்லிகாய் மூட்டை சிதறுவதுபோல் திமுக கூட்டணியும் சிதறும்"‌ என தெரிவித்துள்ளார் ஜெயகுமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk jayakumar said should not alliance with bjp


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->