அவங்கள போல‌.. "மோடி கால்ல விழுந்துட்டு" வர கதை எங்ககிட்ட கிடையாது.!! திமுகவுக்கு அதிமுக பதிலடி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் பாஜகவுக்கு எதிராக அதிமுக கருத்து தெரிவிப்பதில்லை என திமுக தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் ‌"தேஞ்சு போன ரெக்கார்டு இது.. அதே கேள்வியை கேட்டுட்டு இருக்கீங்க.. அந்தக் கேள்விக்கே இடம் இல்லை.. இந்த கேள்வியும் எழாது.. அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.. யார் விமர்சனம் பண்றது இல்ல.. சும்மா இங்க விமர்சனம் பண்ணிட்டு அங்க போய் மோடி கால்ல விழுந்துட்டு வராங்க..

விமர்சனம் பண்ணிட்டு அங்க போய் பல்லக்கு தூக்கிட்டு வராங்க.. கூட்டணியில் இருக்கும் போது தோழமையோடு இருந்தோம்.. இப்போது எதிரி என்ற கண்ணோட்டத்தோடு நிச்சயமாக பார்ப்போம்.. அதற்குண்டான விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்.." என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk jayakumar response to DMK criticism


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->