பாஜகவின் மறைமுக கொத்தடிமை திமுக.. வெளுத்து வாங்கும் அதிமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "திமுகவினரின் திட்டம் எப்போதுமே நட்சத்திர ஓட்டல் என்ற அளவில் இருக்கும். ஆனால் எங்களுக்கு ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் தான் எங்களுடைய சித்தாந்தம்.

அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. யார் பாஜக ஆட்சியில் அனுபவித்தார்கள். இவர்கள் அதைப் பற்றி பேசலாமா? கொத்தடிமை போன்று இன்றைக்கும் டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா விதத்திலும் பாஜகவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். உங்களின் மறைமுக கொத்தடிமைத்தனம் கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரும் என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK jayakumar criticized DMK BJP MKSTALIN


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->