அதிமுகவின் உள்கட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று, அதிமுக உறுதியளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் சட்ட விதிகளின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளுக்குள் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015 ஏப்ரல் மாதம் வரை அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக ஏழாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் மற்ற நிர்வாகிகளும் உள்கட்சி தேர்தலில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பு பதவி உருவாக்கப்பட்டது. 

இதற்கு ஏற்ப கட்சியின் விதிகள் திருத்தப்பட்டது. இந்த விதிகளுக்கு அதிமுகவின் பொது குழுவும் அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து மாநில, மாவட்ட, கிராம அளவிலான கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அதிமுக அறிவித்து இருந்தது. 

இதற்கிடையே அடுத்த மாதம் அதிமுகவின் உள்கட்சி தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், கொரோனா காரணமாக போதிய அவகாசம் இல்லாத காரணத்தினால் இந்த உட்கட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டு அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியது.

இந்த நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் அந்த மனுவில், அதிமுகவில் உள்கட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை, எப்போது நடக்கும் என்று தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, கொரோனா காரணமாக அதிமுகவின் உள்கட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அதிமுக உறுதியளித்துள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக அதிமுக-வையும் இணைத்து, வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk inner party election dec


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->