அதிமுக வேட்பாளர் யார்? அறிவிக்கப்போவது ஆட்சிமன்றக்குழு - சற்றுமுன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 

வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக ஈரோட்டில் ஈபிஎஸ் தலைமையில் நேற்றும், இன்றும் சுமார் 8 மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுகவின் ஆட்சிமன்ற குழு அறிவிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "உரிய நேரத்தில் வேட்பாளரை அறிவிப்போம்; கூட்டணி தர்மத்தின்படி எல்லோரையும் சந்தித்தோம், அவர்கள் விரைந்து முடிவு எடுப்பார்கள்.

ஈரோடு கிழக்கு தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையேயான போட்டி; பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை, எனவே ஜனநாயகம் தான் வெல்லும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Erode East candidate info 2712023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->