அதிமுக வேட்பாளர் யார்..? இன்று மாலை வேட்பாளர் பெயர் வெளியாக வாய்ப்பு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக வேட்பாளர் விருப்ப மனு பெறுதல் இன்று மாலையுடன் நிறைவு...!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு அளித்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவே நேரடியாக களம் காண உள்ளது.

ஆனால் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக இரு அணிகளாக பிரிந்து உள்ளன. இரு அணிகளும் தங்கள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் கடந்த ஜன.23ஆம் தேதி முதல் ஜன.26ம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள அதிமுக உறுப்பினர்கள் விருப்ப மனு தரலாம் என அறிவித்தனர். 

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமான பெறுதல் நிறைவடைவதால் இன்று மாலை அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத நிலையில் அதிமுக வேட்பாளர் யார் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK candidate for Erode East byelection will to be announce today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->