ஒரே‌ போடாக போட்ட பிரேமலதா.. கோதாவில் அதிமுக.. விழிபிதுங்கும் பாஜக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவுடன் இரண்டு கட்டு பெயர்ச்சி வார்த்தைகளை நடத்தி முடித்துள்ள தேமுதிக தரப்பு நேற்று முன்தினம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியிருந்தது.

மாநிலங்களவை சீட் வேண்டும் என பாஜகவிடம் தேமுதிக நிபந்தனை விதிக்க அதற்கு பாஜக மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலாவது தனிச் சின்னத்தில் வெற்றி பெற்று வந்தால் மாநிலங்களவை சீட் தருவதாக பாஜக திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதனால் பாஜகவுடனான பேச்சுவார்த்தைக்கு தேமுதிக ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும், நேற்று சிஏஏவுக்கு எதிராக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு சிஏஏ தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் பிரேமலதா வலியுறுத்தியது பாஜகவுடனான கூட்டணி இல்லையென்ற நிலைப்பாட்டை தேமுதிக எடுத்ததை மறைமுகமாக வெளிப்படுத்தியது.

இத்தகைய சூழலில் தான் அதிமுக தரப்பு மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தேமுதிகவை அழைத்துள்ளது. தேமுதிக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுவானது என்று அதிமுக தரப்பு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துகிறது‌. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk called Dmdk for next level alliance discussion


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->