ரேஸில் முந்தும் அதிமுக! 165 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்! உளவுத்துறை சொன்னது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த பட்டியலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 21 பேர் முன்னாள் அமைச்சர்கள் என்பதே இந்த பட்டியலின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இந்த பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் 8-வது முறையாக போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களும் தங்களது பழைய கோட்டைகளிலேயே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ராஜன் செல்லப்பா மற்றும் தாமரை எஸ். ராஜேந்திரன் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் முக்கியமான அரசியல் கணக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுக தரப்பில் நடத்தப்பட்ட ரகசிய சர்வேயில், அதிமுக கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் 143 முதல் 155 இடங்கள் வரை வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் NDA கூட்டணிக்கும் 152க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கலாம் என மற்றொரு சர்வேயும் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சாதகமான கணிப்புகள் காரணமாக, புதுமுகங்களை அதிகமாக அறிமுகப்படுத்தி அபாயம் எடுக்காமல், அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்களையே களமிறக்குவது பாதுகாப்பான அரசியல் யுக்தி என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் ஒரே நேரத்தில் இவ்வளவு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருப்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதமும் எழுந்துள்ளது. பாஜகவின் அழுத்தம் அல்லது புதிய முகங்களை களமிறக்கியால் வெற்றி பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனினும், இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் களமிறங்குவதால் தேர்தல் போட்டி இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அரசியல் வட்டாரங்களில் எழும் கேள்வி ஒன்றே – எடப்பாடி பழனிசாமியின் இந்த “பழைய படை” வியூகம் திமுகவின் திட்டங்களை உடைக்குமா? அல்லது புதிய வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் வேறு விதமான முடிவை உருவாக்குமா? என்பதுதான். அதற்கான பதில் தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK ahead in the race Amit Shah gave the green signal against the backdrop of 165 seats Edappadi face shines!


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->