இடைத்தேர்தலில் தொகுதியை விட்டுக்கொடுத்த அதிமுக! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த தேர்தலில் தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட, திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. காமராஜ் நகர் தொகுதியானது காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தனித்தனியாக விருப்ப மனுவை வாங்கி வந்தனர். அதிமுக கூட்டணியின் சார்பில் புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியான என் ஆர் காங்கிரஸ் கூட்டணி கட்சியாக இருக்கும்போது மாற்ற அதிமுகவும் பாஜகவும் விருப்ப மனு வாங்கியது சலசலப்பை உண்டாக்கியது. 

இந்த நிலையில் அதிமுக கூட்டணியின் சார்பில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும் அதன் வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளார்கள். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபிஎஸ் இபிஎஸ் இதனை கூட்டாக அறிவிக்க, என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரெங்கசாமி உடனிருந்தார். இந்த வேட்பாளருக்கு பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk support NR congress in kamaraj nagar constituency by boll


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->