அதிமுக நிர்வாகி திடீர் நீக்கம்! ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தென் சென்னை வடக்கு மாவட்டம் நிர்வாகி ஒருவரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 

அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும்,  முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென்சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட எம்ஜிஆர் அணி  தலைவராக இருக்கும்  சதீஷ் என்பவரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவித்துள்ளனர். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk member sack from admk announced By OPS and EPS


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->