அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..! அப்போலோ விரைந்த நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 ஆம் தேதியில் இருந்தே அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இயல்பாக சுவாசிக்க சிரமப்படும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சசிகலா அப்போலோ விரைந்தார். அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். 

இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Madhusoothanan serious in hospital


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal