யார் இந்த சசிகலா...? தண்ணீர் கொடுக்க மறுத்தவர் ஓபிஎஸ்... ரவுண்டு கட்டிய ஜெயக்குமார்...!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 106வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே சசிகலா எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்பொழுது செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் திமுகவை வீழ்த்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஐ சந்திப்பேன் என பதில் அளித்தார்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலா பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இது குறித்து பேசிய அவர் "சசிகலா ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம். அதை நாங்கள் யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எழுச்சி உடன் உள்ளது. சசிகலா யார் இதைப் பற்றி பேசுவதற்கு. அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் அவர்களின் ஒரே வேலை ஒருங்கிணைப்பது. டிடிவி தினகரன் அவரது சொந்தக்காரர் தான். சசிகலாவும், தினகரனும், பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஆரம்பித்தால் நல்ல விஷயம்தான், அதற்கு குறுக்கே நாங்கள் நிற்க மாட்டோம், ஏனென்றால் இது ஜனநாயக நாடு. 

இந்த நிலையில் நேற்று அதிமுக வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்த ஓ.பன்னீர்செல்வம் "நான் சர்வாதிகாரி இல்லை. அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதிமுக வழக்கில் தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் தான் உள்ளது" என பேசி இருந்தார். இது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "சசிகலா குரலில் பன்னீர்செல்வம் பேசுகிறார்.

நீங்கள் ஒன்றுபட்டால் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. அவரைப் பொறுத்தவரை அவரது குடும்பம் வாழ வேண்டும். சொந்த கிராமத்திற்கு குடிக்க தண்ணீர் கொடுக்க மறுத்தவர் ஓபிஎஸ். அவ்வளவு பெரிய சுயநலவாதி. தனது குடும்பம், தனது நலன் என பார்ப்பவர்" என பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk Jayakumar asked Who is this Sasikala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->