#BigBreaking | ஓபிஎஸ்.,க்கு வேலையே இல்லை - உச்சநீதிமன்றத்தில் சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி பதில்மனு! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த மோதலை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, பின் நீதிமன்ற தீர்ப்பால் ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டது. 

மேலும், அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 72 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமைக் அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு சென்றார்.

இதற்கிடையே, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்து இருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்து மேல்முறையிட்டு வழக்கிற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பதில் மனுவில், "கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அதிமுக அலுவலகத்தின் உரிமையை கூற முடியாது. அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்க எந்த முகாந்திரமும் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK HEAD OFFICE CASE EPS SC REPLY


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->