அதிமுகவினர் கணவனத்திற்கு! எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்!
ADMK Edappadi palanisami election campaign 2025
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த தருமபுரி, நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றம் செய்யப்பட்டதாக கட்சியின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற கோஷத்துடன் பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் 5வது கட்டமாக செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் தருமபுரி, நாமக்கல் பகுதிகளில் அவர் பயணம் மேற்கொள்வதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
ஆனால் சமீபத்திய நிலைமையை கருத்தில் கொண்டு அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, பழனிசாமியின் இந்த மாவட்டங்களில் நடைபெறும் சுற்றுப்பயணம் அக்டோபர் 2, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Edappadi palanisami election campaign 2025