2 பக்கமும் பச்சை கொடி., அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு முடிவுக்கு வருகிறது.! - Seithipunal
Seithipunal


சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. மூன்று தினங்களாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயத்தில் தேமுதிக தரப்பில் 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும், ஒரு ராஜ்ய சபா சீட்டையும் கோரிக்கையாக வழங்கியுள்ளது. 

தேமுதிக 20 தொகுதிகளுக்கான பட்டியல் படி,

1) விருகம்பாக்கம், 2) திருக்கோவிலூர், 3) ரிஷிவந்தியம், 4) எழும்பூர், 5) சூலூர், 6) ஈரோடு கிழக்கு, 7) ஆம்பூர், 8) ராணிப்பேட்டை, 9) சேலம் வடக்கு, 10) சோளிங்கர், 11) தர்மபுரி, 12) மதுரை மத்திய தொகுதி, 13) விருதுநகர், 14) திருவள்ளூர், 15) ராதாபுரம், 16) விருத்தாசலம், 17) பண்ருட்டி, 18) மயிலாடுதுறை, 19) மேட்டூர், 20) பேராவூரணி. 

இன்று மாலை அதிமுக- தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியாக என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுக்கு 15 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMDK TODAY FINAL ALLIANCE1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->