திமுக - பாஜக கூட்டணிக்கு ஓகே..!! கேபினட் அமைச்சர் பதவியும் உண்டு..!! ஆனால் ஒரு நிபந்தனை..!! உண்மையைப் போட்டு உடைத்த சி.வி சண்முகம்..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை அடுத்த நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்.எல்.சி நிறுவனம், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் "மத்திய பாஜக அரசு சொல்லும் வேலைகளை வாயை மூடி, தலையில் தூக்கிவைத்து திமுக அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்.எல்.சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதற்காக விவசாய நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. அதனை திமுக அரசு செய்து வருகிறது. 

தமிழகத்தில் மட்டும் தான் திமுகவினர் மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசுவார்கள். ஆனால் டெல்லிக்கு சென்று விட்டாள் மத்திய பாஜக அரசிடம் அய்யா.. அம்மா.. தாயே.. என்று கெஞ்சுகிறார்கள்.

திமுகவின் 39 எம்.பிக்களும் டெல்லி சென்று பிச்சை எடுக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி.

விடியா திமுக அரசு என்.எல்.சி பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய கட்சிகள், திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளத் தயாரா? திமுக கூட்டணி கட்சிகள் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருப்பது யாரை ஏமாற்றும் வேலை?

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் திமுக - பாஜக கூட்டணி அமையும். திமுகவுடன் கூட்டணி வைத்த அனைத்து கட்சிகளையும் ஓரங்கட்ட போகிறார்கள். ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள், இல்லை எனில் காங்கிரஸை கழற்றி விடுங்கள். ஆட்சிக்கு வந்ததும் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என பாஜக தலைமை திமுகவிடம் சொல்லிவிட்டது" என பேசி உள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்ற பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் டெல்லியில் நடக்கும் விஷயங்களை அவ்வப்போது பொதுவெளியில் பேசி வருகிறார்.

அதிமுகவுடன் இணக்கமாக இருந்து வரும் பாஜகவை, திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக எம்.பி சி.வி.சண்முகம் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேற திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இபிஎஸ் ஆதரவாளர் சி.வி சண்முகத்தின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தினை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Cve Shanmugam said DMK ready for alliance with BJP


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->