ஓ.பி.எஸ்க்கு இரட்டை இலை சின்னமா? - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார். 

மேலும், இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை அல்லது தனி சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது, "நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை, தேமுதிகவுக்கு முரசு சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னம் உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகள் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk contest double leaf in parliment election election commission info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->