அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட போகும் தொகுதிகள்.? வெளியான பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் கூட்டணியை  இறுதி செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் பாமக உடன் மட்டும் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளது. பாமகவிற்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.

அதேபோல், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமாகாவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சைக்கிள் சின்னத்தைப் பெற்று தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அதை சாதிக்க முடியும். எனவே அதிமுகவினர் இடம் 12 தொகுதிகளை தமாகா கேட்டு வருகிறது.

தமாகா 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்ட நிலையில், 5 தொகுதிகளை தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 12 தொகுதிகள் வழங்க முடியாவிட்டாலும், 7 தொகுதிகளாவது வழங்க வேண்டும் என தமாகா தரப்பின் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் பாபநாசம், புதுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, காங்கேயம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தமாகா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk and tmc alliance meeing on mar 04


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->