ActorVijay || ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு "நா ரெடி"! வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து விதமான தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்தும் வகையில் நீண்ட நாள் திட்டத்தை வைத்துள்ளது. அதற்காக ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 நபர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.

பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளின் கூட்டம் அவ்வப்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை தீவிர படுத்தியுள்ளதால் நடிகர் விஜய் விரைவில் தமது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால் அதில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவது உறுதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ActorVijay going to register political party to prepare for one nation one election


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->