நாளை முடிசூடும் அரசியல் வாரிசு.. இன்று நிர்வாகிகளை சந்தித்த சினிமா வாரிசு.. பிண்ணனி என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நற்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், விரைவில் அரசியலில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கனிசமான இடங்களில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் ஒரு சில இடங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கே கடும் போட்டி கொடுத்தனர்.

நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது புகைப்படத்தையும், கட்சியின் கொடியை மட்டுமே பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள முன்னாள் எம்எ.ல்.ஏ புஸ்ஸி ஆனந்த் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வாரிசு பட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் பிரச்சினை நிலவுவதாக கூறப்படுகிறது. இதில், உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக உள்ள நிலையில், இன்று நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து ஆலோனை நடத்துவது கவனம் ஈர்த்துள்ளது.

அதன்படி, இன்று அரியலூர், பெரம்பலூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சென்னை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து நடிகர் விஜய் பேசுவதுடன் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த நிலையில் இந்த மாதமும் சந்தித்துள்ளார். இனி மாதம் ஒரு முறை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டம் வாரிசு திரைப்படம் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay meets with Vijay makkal iyyakkm admins


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->