14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா ரசிகர்களை சந்திக்கும் விஜய்.! அரசியலில் திடீர் திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும், தனது கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் அறிமுகப்படுத்தினார். 

 

இந்த செயலியின் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது கட்சியில் இணைந்துள்ளனர். தற்போது விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போது கேரள ரசிகர்களை விஜய் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரள ரசிகர்களை விஜய் சந்திப்பது முக்கியமான நிகழ்வாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay meet kerala fans after fourteen years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->