இந்திரா காந்தியின் இறப்பை கேலியாக சித்தரித்து கனடாவில் ஊர்வலம் - காங்கிரஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கனடாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பை சித்தரிக்கும் வகையில் ஊர்வல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று இருக்கிறது. இது பலரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கனடாவில் நடைபெற்ற ஊர்வலத்தை குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்திய தூதரகத்தில் இருந்து கனடா தூதரகத்திற்கு இந்த நிகழ்ச்சி குறித்து கண்டனம் தெரிவிக்க என அறிவுறுத்தி உள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளர்களால் அந்த ஊர்வலம் நடத்தப்பட்டு இருக்கிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பு குறித்து சித்தரிக்கும் படியான காட்சிகள் இடம் பிடிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோவில் இந்திரா காந்தி தன்னுடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொள்ளப்படுவது போல் சித்தரிக்கப்பட்டு இருந்தது .மேலும்ஸ்ரீ தர்பார் சாஹிப் தாக்குதலுக்கான பழிவாங்கல்" என்ற வரிகளும் இடம்பெற்று இருந்தது.

இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்துக் கொண்டிருக்கிறது.காங்கிரஸ் பிரமுகர் மலிந்த தியோரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "இந்திரா காந்தியின் படுகொலையை சித்தரித்து கனடாவின் ப்ராம்டன் நகரில் 5 கி.மீ. தூரத்துக்கு நடந்த இந்த ஊர்வலத்தைக் கண்டு ஓர் இந்தியனாக நான் திகைப்படைந்தேன்.

இது ஒரு தரப்பினைப் பற்றி மட்டும் பேசுவது இல்லை. இது ஒரு நாட்டின் வரலாற்றின் மதிப்பு சம்பந்தப்பட்டது. அதன் பிரதமரின் படுகொலை உண்டாக்கிய வலியைப் பற்றியது. இந்த அத்துமீறல் நிச்சயம் உலகின் கண்டனத்திற்கு உரியது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு மற்றும் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் இவரின் டிவிட்டை ரீடிவிட் செய்து இதனை முழுவதுமாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A procession depicting Indira Gandhis death in Canada


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->