“18–45 வயதினரில் 90% பேர் விஜய்க்கு ஆதரவு” –2026ல் தவெகதான்! விஜய் தமிழகத்தை ஆள போவது உறுதி.. சீனியர் சொன்ன சீக்ரெட்!
90 of people aged 18 45 support Vijay Tvk in 2026 Vijay is sure to rule Tamil Nadu The secret told by the senior
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் கட்சியின் ‘விசில்’ சின்னத்தை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் 90 சதவீத மக்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
விஜய்யின் சுற்றுப்பயணங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது என்றும், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் காரணமாக அனைவரையும் நேரடியாக சந்திக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் கூறினார். “தமிழகத்தை ஆண்ட இரு பெரிய கட்சிகளுக்கும் மாற்றாக புதிய அரசியல் தேவை என்ற மனநிலை மக்களிடம் உருவாகியுள்ளது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “எந்த இயக்கமும் தங்களுக்கு விருப்பமான கூட்டணியில் சேருவது அவர்களின் உரிமை. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்பதே எங்கள் நிலைப்பாடு. விஜய் எந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார்” என்றார்.
முதல்வர் அறிவித்துள்ள 5000 ரூபாய் நிதி உதவி குறித்து, “இது கோடைகால சிறப்பு தொகை அல்ல; தேர்தல் கால நிதி” என விமர்சித்தார். தவெக ஆட்சிக்கு வந்தால் இதுவரை வழங்கப்படாத தீர்வுகளை திட்டமிட்ட முறையில் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து பேசும்போது, “பல கட்சிகளில் 4–5 பேர் சீட் கேட்கிறார்கள்; ஆனால் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும். யார் எப்போது எங்களுடன் இணையப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியும்” என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக-வில் சேர்வார்களா என்ற கேள்விக்கு, “பெயரை கூற முடியாது; பொறுத்திருந்து பாருங்கள்” என பதிலளித்தார்.
மேலும், தவெக தேர்தல் அறிக்கையை தலைவர் விஜய் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார் என்றும், “மக்கள் எதிர்காலத்தை நோக்கிய தெளிவான ஆவணமாக அது இருக்கும்; தமிழகத்தை ஆளத் தயாரான அறிக்கை என மக்கள் வியக்கும் வகையில் உருவாகும்” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில், தவெக தரப்பின் இந்தக் கருத்துகள் அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
90 of people aged 18 45 support Vijay Tvk in 2026 Vijay is sure to rule Tamil Nadu The secret told by the senior