டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட 75 காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது.!! - Seithipunal
Seithipunal


நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் எம் பி ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன்  பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்திருப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது. இதனுடைய ஜூலை 21 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி இருந்தது. இதை ஏற்ற சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கடந்த 21 ஆம் தேதி நேரில் ஆஜரானார். 

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகம் முதல் விஜய் சவுக் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

 

இதையடுத்து, ராகுல் காந்தி உட்பட 75 காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் கைது செய்த நிலையில், ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 congress mps arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->