திருமாவளவன் உட்பட மேலும் 70 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு குளறுபடி விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமலியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முடியாதும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து அமைதியில் ஈடுபட்டதால் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று மேலும் 12 மக்களவை உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சூலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு குளறுபடி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் இன்று ஒரே நாளில் மக்களவை, மாநிலங்களவையில் 70க்கும் மேற்பட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நேற்று 78 எம்.பிக்களை சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

70 more MPs suspended from Lok Sabha including Thirumavalavan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->