உடையும் திமுக கூட்டணி.. உருவாகும் மூன்றாவது அணி.? அதிர்ச்சியில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக சார்பில் முக ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக தேர்தல் என்றால் இந்த நேரத்தில் கூட்டணி முடிவாக இருக்கும். ஆனால் இந்த முறை கூட்டணி முடிவாகவில்லை. அதிமுக தரப்பில் பாஜக உடன் மட்டும் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் திமுக தரப்பில் அப்படி எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சி போதுமான சீட்டு ஒதுக்கீடு கிடைக்காது என்ற காரணத்தால் வேறு கூட்டணிக்கு தாவ முயற்சித்து வருகிறது. அதே போல் வைகோவும், திருமாவளவனும் உச்சகட்ட குழப்பத்தில் உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் திமுக தலைமை கண்டிப்பு காட்டி வருகிறது. 

அதிக தொகுதிகளை கேட்கும் கட்சிகளை ஒதுக்கிவிட்டு, கமலை உள்ளே கொண்டுவர திமுக முயற்சித்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேசியதை பார்த்தால், திமுகவுடன் கூட்டணி இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கமல் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அவருடன் கூட்டணி சேர காங்கிரசுக்கு விருப்பம் இருப்பதாக தெரிகிறது. 

திமுகவில் அதிக சீட் கிடைக்காத பட்சத்தில், நிச்சயம் கமலுடன் காங்கிரஸ் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி காங்கிரஸ் வந்தால் இந்த முறை விடக்கூடாது கட்டாயம் மய்யத்திற்கு இழுத்துவிட வேண்டுமென்று கமல் தீவிரம் காட்டி வருகிறார். ஒருவேளை திமுகவில் பேரம் சரியாக அமைந்துவிட்டால், கம்யூனிஸ்டுகளை தங்கள் பக்கம் இழுக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd team for tamilnadu assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->