இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ் கட்சி!  - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 27 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, வரும் பீகார் சட்டமன்ற தேர்தலோடு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 27 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்ததை அடுத்து, மத்திய பிரதேசத்தில் மொத்தம் 27 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த 27 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை இன்று கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 BY ELECTION CANDIDATE ANNOUNCEMENT CONGRESS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->