முதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை.! வெளியானது அறிவிப்பு.! முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. முதல் முறை வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"2021 இன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (Designated Polling Station Locations) இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட உத்திரவின்படி, எதிர்வரும் 13.03.2021 (சனிக்கிழமை) மற்றும் 14.03.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (Designated Polling Station Locations) (தோராயமாக 30,400 இடங்கள்) சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2021 இன் போது வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இம்முகாமினைப் பயன்யபடுத்தி தங்களது மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்லிடப்பேசி/கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st time voter id card


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal