உச்ச நீதிமன்றம் குறித்து 02 பாஜக எம்பிக்கள் சர்ச்சை பேச்சு; தனிப்பட்ட கருத்து என்று ஜே.பி நட்டா கருத்து..! 
                                    
                                    
                                   02 BJP MPs controversial speech on the Supreme CourtJP Nadda opinion is personal
 
                                 
                               
                                
                                      
                                            10 மசோதாவிற்கு அனுமதியளித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த 02 பாஜக எம்பிக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜேபி நட்டா, இந்த கருத்துகளை அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. அத்துடன், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட அந்த மசோதாக்களை 03 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்து பேசினார். அத்துடன், பாஜக எம்பி நிஷிகாந்த் துபேயும் இதுபற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது;
‘உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டுமானால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம் துன்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களை நீதிமன்றம் தனக்குத்தானே பறித்துக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் வேலை எனவும், நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவிட முடியும் என்றும்,  ஆனால் நாடாளுமன்றத்திற்கு அல்ல’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான தினேஷ் சர்மா கூறுகையில், ‘இந்திய அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி உயர் அதிகாரம் பெற்றவர்; ஜனாதிபதியை எவரும் சவால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவை, மாநிலங்களவை மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர், உச்சநீதிமன்றம் அதற்கு உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பில் நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தின் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் சில நடவடிக்கைகள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பாஜக எம்பிக்களின் கருத்துகள் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் உள்ளதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக தலைவர்களை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட பதிவில், ‘நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்பிக்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  அது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. ஆனால், இத்தகைய கருத்துகளை பாஜக ஆதரிக்கவில்லை என்றும்,  பாஜக இந்த கருத்துகளை நிராகரிக்கிறது. பாஜக நீதித்துறையை மதிக்கிறது; அதன் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலுவான தூண்கள் என்று நம்புகிறோம். எனவே சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்குமாறு பாஜக எம்பிக்கள் இருவர் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       02 BJP MPs controversial speech on the Supreme CourtJP Nadda opinion is personal