டேஸ்ட் ல அசந்து போவீங்க....சோள நூடுல்ஸ் செய்வது எப்படி தெரியுமா? - Seithipunal
Seithipunal


சோள நூடுல்ஸ் 
தேவையான பொருட்கள் :
பொருள்                            - அளவு
சோள மாவு                         1 /2 கிலோ
காளான்                                2 கப் 
பொடியாக நறுக்கிய
வெங்காயம்                             2 கப் 
துருவிய குடைமிளகாய்    2
மிளகுத் தூள்                   ஒரு டீஸ்பூன் 
கரம் மசாலா                   ஒரு டீஸ்பூன் 
உப்பு                                 தேவையான அளவு
எண்ணெய்                      தேவையான அளவு


செய்முறை :
முதலில்,சோள நூடுல்ஸ் செய்வதற்கு சோள மாவை வாணலியில் பச்சை வாசனை போகும்வரை வறுத்து ஆற வைக்கவும். பிறகு அதில் சூடான தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். பிறகு காளானைப் பொடிப்பொடியாக நறுக்கி கரம் மாசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் வேக வைத்த காளானை சேர்த்து வதக்கவும். பிறகு நூடுல்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அவ்வளவுதான் சுவையான சோள நூடுல்ஸ் தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youll be amazed by the taste Do you know how to make corn noodles


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->