ஏன் சாப்பிட்ட பிறகு உடனே குளிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்?!  - Seithipunal
Seithipunal


வாழைக் கட்டையை நடும்போது ஏன் அதன் இலைகளை வெட்டுகிறார்கள்?

ஏனெனில், ஆவி ஈர்ப்பினால் நீர் இழத்தலைக் குறைக்கவும், காற்றினால் இலைகள் திரும்புதலைத் தடுக்கவும் தான்.

நெற்பயிரின் அடித்தண்டுகளை எரிப்பதைவிட சேர்த்து உழுவது நன்று என ஏன் கூறுகிறார்கள்?

அவற்றை எரியாது உழும்போது அவை மண்ணுடன் சேரும். மண் நுண்ணங்கிகளின் தொழிற்பாடு அதிகரிக்கும். மண்ணின் பௌதீக இயல்புகள் விருத்தியடையும். அயன் பரிமாற்றம் அதிகரிக்கும். எரிப்பதால் மண் நுண்ணங்கிகள் அழியும், மண் இழையமைப்பு பாதிக்கப்படும்.

ஏன் சாப்பிட்ட பிறகு உடனே குளிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்?

நாம் சாப்பிட்டவுடன் குளித்தால் செரிமான செயல்முறை மெதுவாக குறைந்துவிடும். குளிர்ந்த நீரில் சில இரசாயனங்கள் செயல்படுகின்றன. உடலில் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு அது செரிமானம் செயலிழக்கச் செய்யும்.

அந்த வேலை கிடைக்க நாம் எத்தனையோ போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கின்றது. இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு தகவல்கள், தனியார் வேலை, அரசாங்க வேலை என தனித்தனி பிரிவுகளாக கொண்ட ஒரே செயலி, தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு தகவல்கள் 

உப்பைக் கொட்டினால் துரதிர்ஷ்டம் என்று கூறுவதற்கான காரணம் என்ன?

இடைக்காலங்களில் உப்பு என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது. மேலும் அதனை மருத்துவத்திற்காக பயன்படுத்தினார்கள். அதனால் தான் உப்பை கொண்டு செல்லும்போது, அதனை கவனமாக எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள். பின்னாட்களில் இந்தப் பழக்கமே உப்பைக் கொட்டினால் துரதிர்ஷ்டம் என்று மாறியது.

தூசியால் மூடப்பட்ட தாவரம், தூசியால் மூடப்படாத தாவரங்களைப் போன்று நன்கு வளராமல் இருப்பதற்கான காரணம் என்ன?

இலைகள் தூசியால் மூடப்பட்டால் சூரிய ஒளி செல்வது கடினம். இலைவாய்கள் மூடப்பட்டிருப்பதால் ஆக்ஸிஜன், கார்பன்-டை ஆக்சைடுகளை உள்ளெடுக்காது. இதனால் ஒளித்தொகுப்பு, சுவாசம் முதலிய உடற்தொழிற்பாடுகள் தடைபட்டு வளர்ச்சியும் குன்றும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

why do not take bath after ate


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->