முகம் ஜொலிக்க வைக்கும் தக்காளி–பப்பாளி ஐஸ் மசாஜ் டிப்ஸ்!வெறும் 10 நிமிடங்கள் போதும்!! முகம் ஜொலிக்கும்..! - Seithipunal
Seithipunal


உங்களது முகம் எப்போதுமே டல்லா இருக்கு, எந்த மேக்கப் போட்டாலும் பளபளப்பா இல்லேன்னு ஃபீல் பண்ணுறீங்களா? அப்படியென்றால் இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான ஹோம் ரெமடி டிப்ஸ்!

வெயில், மனஅழுத்தம், மாசுபாடு — இவை மூன்றுமே நம்ம சருமத்திலிருந்து இயற்கையான பொலிவை பறிச்சு விடுற முக்கிய காரணங்கள். ஆனா பார்லர்ல போகாமலேயே, வீட்டுல இருக்கும் தக்காளி மற்றும் பப்பாளியை மட்டும் பயன்படுத்தி முகத்தை ஜொலிக்க வைக்கலாம்.

தக்காளியில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட், சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தை காக்குது. வைட்டமின் C மற்றும் E நிறைந்திருப்பதாலே, முகத்தில் இருக்கும் தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் எல்லாம் குறைந்து, முகம் இளமையாக மாறும்.

அதே சமயம், பப்பாளியில் இருக்கும் பைப்பேன் எனும் இயற்கை என்சைம், இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுது. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சரும நிறத்தை சீராக்கி, தெளிவான முகத்தைத் தருது.

அப்படின்னா எப்படி தயாரிப்பது தெரியுமா?

ஒரு பழுத்த தக்காளியை நன்றாக அரைத்து, அதை வடிகட்டி, அந்த சாற்றை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வையுங்கள் — தக்காளி ஐஸ் கியூப் ரெடி!அதே மாதிரி, பழுத்த பப்பாளியை துண்டுகளாக்கி அரைத்து, அதன் சாற்றை தனியாக எடுத்து ஐஸ் ட்ரேயில் ஊற்றுங்க — பப்பாளி ஐஸ் கியூப் ரெடியா போச்சு!

பயன்படுத்துவது எப்படி என்றால் — முகத்தை நன்றாக கழுவி, ஒரு ஐஸ் கியூபை மெல்லிய துணியில் போட்டு, வட்ட வடிவில் மெதுவாக முகத்தில் மசாஜ் பண்ணுங்கள். கண், நெற்றி, உதடு, கழுத்து பகுதிகளில் கவனமா செய்யணும். ஐஸ்கட்டி கரையும் வரை மசாஜ் பண்ணி, பிறகு பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.

இதை தினமும் ஒரு முறை செய்தா, முகம் எப்போதுமே ஜொலிக்குது, புத்துயிர் அடைஞ்ச மாதிரி பளபளக்கும்.

அடுத்த முறை முகம் டல் ஆகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த தக்காளி–பப்பாளி ஐஸ் மசாஜ் டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomato papaya ice massage tips to make your face glow Just 10 minutes is enough Your face will glow


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->