தினம் ஒரு வெள்ளரி.. கோடையில் குளிர்ச்சியுடன் இருங்கள்..!! - Seithipunal
Seithipunal


கோடையில் நம்மை தாக்கக்கூடிய வெயில், வெம்மை, நாவறட்சி, சரும பிரச்சனை, தோல் சம்பந்தமான பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நாம் வெல்வதற்கு பல வழிமுறைகளை கையாள வேண்டி இருக்கிறது. குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் என பல்வேறு முறைகளை பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை சமாளிக்க முடிவதில்லை. கோடையை சமாளிக்க வெள்ளரி உறுதுணையாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளை கொண்டது வெள்ளரிக்காய்.

இது பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும். இதனால் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை கூடுதலாக இருக்கும்.

வெள்ளரியின் பயன்கள் :

வெள்ளரிக்காயில் வைட்டமின் பி மற்றும் சி அடங்கியுள்ளன. வெள்ளரிக்காய் வயிறு எரிச்சலை கட்டுப்படுத்துகிறது. மேலும், செரிமானத்திற்கு வெள்ளரிகளை சாப்பிட்டால் எளிதில் பலன் கிடைக்கும். வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும்.

வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும். வெள்ளரிப்பழத்தை அரைத்து பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.

வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும். இளநீருடன் வெள்ளரி துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்று கடுப்பு நீங்கும்.

தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும்.

சிறுநீர் வராமல் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாற்றை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்து இருப்பவர்கள் வெள்ளரிக்காயை அதிகம் உண்ணலாம்.

வெள்ளரிக்காயின் சாறு நோய்தொற்று அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் அநேக ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஊ நிறைந்துள்ளது.

வெள்ளரிக்காய் உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து எளிதாக நீங்கள் உண்ணும் உணவு ஜீரணம் அடைய உதவும்.

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதை நீங்கள் எவ்வளவு உண்டாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. மேலும் இதில் கொழுப்புச்சத்து கிடையாது.

உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் வெள்ளரிக்காயில் இருப்பதால் இதனை நீங்கள் தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஒரு புத்துணர்வை நீங்கள் உணருவீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer special 26


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->